Monday, January 12, 2015

From the heart, yet again...


Veronica Angel

அக்கா உன்னிகிருஷ்ணன் வராராஅப்படியே அனிருத்தையும் கூட்டிட்டு வர சொல்லுங்க அப்போ தான் நான் வில்லுப்பாட்டு பாட வருவேன்... இல்லன வர மாட்டேன்இப்போவே சொல்லிட்டேன்! -குழந்தைகள் சுற்றியிருக்க (ஒன்னு மடியில..ஒன்னு கழுத்த சுற்றிஇதை எழுத ஆரம்பிக்குறேன்.


ஆரம்பிக்குறதும் ஆரம்பிக்குறேன் ஊர் பேர் சொல்லி ஆரம்பிக்குறேன். 'ஊரூர்குப்பம்'-பெசன்ட் நகர் தலப்பாக்கட்டிக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்குற மாதிரி இருக்குற வெட்ட வெளிச்சமான ஊருஎன்ன ராத்திரி மட்டும் இருக்குற அஞ்சாறு தெரு விளக்குல நாலஞ்சு எரியாதுநம்ம மணியோட பக்கத்து வீட்டு தாத்தா தான் சொன்னாரு, 'யம்மாடி..இந்த தெரு விளக்கு எரியவே மாட்டுக்கு..ராத்திரி பொம்பளைங்க வெளிக்கு ஒதுங்க கஷ்டமா இருக்கு..உங்க டிபார்ட்மெண்ட்ல யார் கிட்டயாவது சொல்லி ஏற்பாடு பண்ணுமா..' வில்லுப்பாட்டு ஸ்கிரிப்டோட சுத்திட்டு இருந்த என்னை,ஏதோ சர்கார் ஆபிஸ்லயிருந்து வந்துருக்கேன்னு நினைச்சு புலம்புனாரு.. இப்படி சந்துபொந்தெலாம் குட்டி பசங்களோட சுத்தி சுத்தி சுத்தியே இப்போ தெருக்கொரு வீட்ல போய் மீன்குழம்பு சாப்பிடுற அளவுக்கு பழக்கமாகிடுச்சு!


'வில்லுப்பாட்டு அக்கா வந்துட்டாங்க..தலை வாரிட்டு சீக்கிரம் கிளம்புங்கடி'ன்னு அம்மாக்கள் பிள்ளைகளை அனுப்புறப்போ வாய்க்கு வாய் வில்லுப்பாட்டு அக்கா..வில்லுப்பாட்டு அக்கான்னு  கூப்பிடுவாங்கஅப்போல்லாம் ரொம்ப கூச்சமா இருக்கும்இருக்காதா பின்ன?   வாழ்க்கையில இன்னும் ஒரு தடவ கூட வில்லுப்பாட்டு கச்சேரி பார்த்தது இல்ல..யூ-டுயூப்ல பார்க்கலான்னு போனா ரெண்டு நிமிஷத்துக்கு மேல கூட பார்க்க பொறுமை இல்லகுழந்தைங்கள் கிட்ட இருந்து சுட்ட ரெண்டு மெட்டுசுத்தி நடக்குற நாலு விஷயத்த வச்சே மேடை ஏத்திடறது பழக்கமாயிடுச்சுசுட்ட ரெண்டு மெட்டு எப்பவுமே பிரச்சன இல்ல.ஆனா சுத்தி நடக்குறது தான் மனச கொடையுது..


ஒரு நாள் பவானி ஓடி வந்து சொன்னா..'அக்கா அக்கா.. நம்ம மணி கேஎப்சி-யாண்ட பிச்சை எடுத்துட்டு இருக்குறான்.  

மறுநாள் மணிகிட்ட கேட்டேன். 'டேய் மணி பிச்சை எடுத்தியா?

'இல்லக்கா..'

பொய் சொல்லாதடா..பின்ன ஏன் அங்க போன?

'எனக்கு கோழி கறி பிடிக்கும்..அதான் போனேன்'

இனிமே அங்க போய் பிச்ச எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடு

என் கைய பிடிச்சு இழுத்து 'சரிக்கா சத்தியம்'ன்னு சலிச்சுக்கிட்டே சத்தியம் பண்ணிட்டு ஓடிட்டான்.


நேத்துக்கு தான் மணிய கூட்டிட்டு போய் என் சீனியர் ஒருத்தர் நடத்துற பாயிஸ் ஹோம்ல சேர்க்க போனேன்பார்க்க வீடு மாதிரி தான் இருக்கும்அதனால என் அண்ணன் வீடு தான்நல்லா பார்த்துபாங்கன்னு சொல்லி தான் கூட்டிட்டு போனேன்போனவுடனே அவர பார்த்து கேட்டான்உங்களுக்கும் இந்த அக்காக்கும் ஒரே அப்பாவான்னுஅவரும் சிரிச்சுட்டே கேட்டாரு..'ஏன்டா உன்ன இங்க வந்து சேக்குறாங்க?'

'அதுவா..நான் கோயில்ல இருந்து காசு எடுத்துட்டேன்..குருசாமி என்ன போலீசுல பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொன்னாருஅதான் நான் கெட்டு போய்டக்கூடாதுன்னு அக்கா இங்க என்னை சேக்குது'- ரொம்ப வெகுளியாய் சொன்னான்.

'சரி.. காச என்னடா பண்ணுனே?' அவர் கேட்க

'அதுக்குள்ளார போய் உட்காந்து கோழிக் கறி வாங்கி சாப்பிடேன்ல..!' - எதையோ சாதிச்ச மாதிரி பெருமையா சொன்னான் மணி.

பெசன்ட் நகர் கடற்கரையே தனக்கு சொந்தம் மாதிரி கைகள வீசிட்டு எப்பவும் நடக்குற மணிநாலு சுவத்துக்குள்ள எப்படி இருக்க போறான்னு நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு!

ஆனா அவனோ 'அண்ணே..நான் இன்னிக்கு அக்காவோட போய்ட்டு பொங்கல் முடிச்சுட்டு வந்து இங்க சேந்துக்குரேன்ன்னு சொன்னான்.
ஏன்டா..?இங்கயும் பொங்கல் கொண்டாடுவோம்..இங்க இருந்து கொண்டாடுன்னு அவர் சொல்ல..

எங்க எல்லையம்மன் கோயில்ல திருவிழா அண்ணே..பாட்டு பாடுறவங்க எல்லாம் வராங்க..நான் போய்ட்டு வந்துடுறேன்னு சொன்ன மணிய எதுவும் சொல்ல முடியாம என்கூடவே அனுப்பி வச்சுட்டாரு..

நம்ம கிட்ட இருக்குற காசு தான் பல மணிக்களை  ரோட்ல ஸ்டிக்கர் விக்கவும்குட்டிக்கரணம் போடவும் வைக்குதுங்கறது கசப்பான உண்மை..
ஆனா நாம எப்பவும் போல மேல்தட்டு கீழ்தட்டுன்னு பேசி பேசி தடுக்கி தான் விழுந்துட்டு இருக்குறோம்.. வர்க்கம் இனம் கலாச்சாரம் குலம் கோத்திரம் எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளிவச்சுட்டு..கலையை ஒரு குழந்தையின் மனநிலையில இருந்து பார்த்தா..சந்தேகமே இல்ல..அது எல்லாத்தையும் தாண்டி கொண்டாடக்கூடியதாகவே இருக்கு.! எத்தன கோடி பிழைகள் இருந்தாலும் அது கொண்டாடக்கூடியதாகவே இருக்கு..


'ரெண்டையும் இணைக்குற மெல்லிய நூல் நம்ம கையில தான்  இருக்கு'ன்னு  ஒரு தடவ ஞாநி என் கல்லூரிக்கு பேச வந்தப்போ சொன்னது ஞாபகம் வருது.இவ்வளவு நாள் கண்ணுக்கே தென்படாத அந்த நூல் இன்னிக்கு கையில புலப்பட்டிடும் என்கிற நம்பிக்கையோட ஊரூர்-ஆல்காட் குப்பம் குழந்தைகள் சார்பா மார்கழி விழாவுக்கு அனைவரையும் அன்போட அழைகின்றேன்.

-- 

No comments:

Post a Comment